×

பந்தை பளபளப்பாக்க வியர்வையை பயன்படுத்துவதிலும் சிக்கல்...: ஸ்டார்க் கவலை

சவுத்தாம்டன்: கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பந்தை பளபளப்பாக்க எச்சிலை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக வியர்வையை பயன்படுத்துவதிலும் சிக்கல் உள்ளதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கவலை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள்  ஆஸ்திரேலிய அணி உள்ளூர் அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. தொடர்ந்து செப்டம்பர் 4ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், செப்டம்பர் 11ம் தேதி முதல் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரிலும்  இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன. நோய் தொற்றைத் தடுக்கும் வகையில், பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த ஐசிசி ஜூன் மாதம் தடை விதித்தது. வியர்வையை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்க எந்த தடையுமில்லை என்றும் அறிவித்திருந்தது.

இது குறித்து ஸ்டார்க் நேற்று கூறியதாவது: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டங்களைப் பார்க்கும்போது, வியர்வையை பயன்படுத்துவதிலும் சில தடைகள், சிக்கல்கள் இருப்பதை உணர்கிறோம். பந்தை பளபளப்பாக முகத்தில், நெற்றியில்,  கழுத்தில் வழியும் வியர்வையை பயன்படுத்துவதில் ஆபத்து உள்ளது. இதன் மூலமாக வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், ஆஸ்திரேலிய வீரர்களும் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளின்போது நெற்றி, முகம் கழுத்தில் வழியும் வியர்வையை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்கும் செயலில் ஈடுபட மாட்டார்கள். பயிற்சி ஆட்டங்களின்போது மாற்று வழிகளை பயன்படுத்தி பார்ப்போம். வெள்ளை நிற பந்தை பயன்படுத்தி விளையாடும்போது இந்த பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன். இவ்வாறு ஸ்டார்க் கூறியுள்ளார்.

Tags : Stark , Ball, Stark, Anxiety
× RELATED ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.!...